shadow

பக்ரீத் பண்டிகைக்காக 2 நாள் விடுமுறை எடுத்த ராகுல்காந்தி

rahul-gandhiஉத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செய்து வரும் நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் தனது பிரச்சாரத்தை கடந்த சில நாட்களாக செய்து வருகிறார்.

இதன் முதல்கட்டமாக கடந்த 6-ம் தேதி “மெகா யாத்திரை” ஒன்றை ராகுலாந்தி தொடங்கினார். 2500 கிமீ வரை செல்லவுள்ள இந்த யாத்திரை டெல்லியில் அடுத்த மாதம் முடியவுள்ளது. உ.பியில் உள்ள 407 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை சென்றடையும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுடன் அதிகம் அவர் கலந்துரையாட உள்ளார். ராகுலின் அரசியல் வாழ்வில் அவர் மேற்கொள்ளும் பெரிய தேர்தல் பிரசார யாத்திரை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா யாத்திரை மூலம் 200 தொகுதிகளில் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த முடியும் என்று ராகுல் நம்புகிறார்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வரும் 12 மற்றும் 13-ம் தேதி யாத்திரை நிறுத்தப்படுவதாகவும், வரும் 14-ம் தேதியில் இருந்து யாத்திரை தொடங்கும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதை ராகுல் காந்தி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply