ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்த பாஜக எம்.பி. பெரும் பரபரப்பு

sathrughan singha350பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மோடிக்கு எதிராக ஒருசில பாஜக தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் பாஜக எம்.பியும், பாஜகவின் முக்கிய தலைவரும், பாலிவுட் நடிகருமான சத்ருஹன்சின்ஹா, ராகுல்காந்தியை ‘வளரும் நட்சத்திரம்’  என பாராட்டியுள்ளதால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ”இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நிதிஷ்குமார் தலைமையில் அமையும் புதிய அரசுக்கும், லாலு பிரசாத் மற்றும் வளரும் நட்சத்திரம் ராகுல்காந்தி ஆகியோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் தங்களது பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாமைக்கு வருந்துகிறேன் என்றும் இருப்பினும் உங்களின் நல்லாலோசகராகவும், போற்றுபவராகவும், நண்பராகவும் எப்போதும் இருப்பேன்” என்றும் அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *