shadow

ராகுல்காந்திக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூர் கல்லூரி மாணவிகள்
rahul gandhi
பாரத பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களையும் அவருடைய வெளிநாட்டு பயணங்களையும் தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு பெங்களூரை சேர்ந்த மாணவிகள் நேற்று அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதனால் ராகுல்காந்தி பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

நேற்று பெங்களூரில் கல்லூரி மாணவிகளிடம் உரையாடிய ராகுல்காந்தி, ‘நாட்டை சுத்தமாக வைத்து கொள்ள மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டம் உரிய முறையில் செயல்படுகிறது என, நீங்கள் நினைக்கிறீர்களா? என, மாணவிகளின் மத்தியில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.  

இதற்கு, மாணவியரிடம் இருந்து, ‘இல்லை’ என, பதில் வரும் என ராகுல்காந்தி எதிர்பார்த்த நிலையில், மாணவிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ‘ஆம்’ என, சத்தமாக பதில் கூறினர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராகுல்காந்தி உடனே அடுத்த கேள்விக்கு தாவியதாக கூறப்படுகிறது.

‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து மாணவிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்கிற எண்ணத்துடன் ராகுல்காந்தி கேட்ட கேள்வி அவரையே தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary: Rahul Gandhi gets ‘yes’ response on NDA govt programmes from students: Bangalore,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *