கமல்ஹாசனை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்: மன்னிப்பு கேட்டரா?

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியபோது அவரது பட போஸ்டர் மீது சிறுவயதில் சாணி அடித்ததாக கூறினார்.

ராகவா லாரன்ஸ் இதனை எந்தவித உள்ளர்த்தமும் இன்றி கூறினாலும் சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் பெரிதாக்கப்பட்டது. இதனையடுத்து ஏற்கனவே இதுகுறித்து விளக்கமளித்த ராகவா, இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ராகவா லார்னஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது:

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகின்றது என்று நான் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன்

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமலஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியையும் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply