ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிக்கு யாருக்கு சூப்பர் ஸ்டார்?

பிரபல நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், தற்போது நடைபெற்று வரும் நெடுவாசல் போராட்டம் ஆகிய போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து பெற்ற நல்ல பெயரை நேற்று ஒரே நாளில் இழந்துவிட்டார்.

நேற்று ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அஜித், விஜய் போன்ற பெரிய ஸ்டார்களே நெருங்க தயங்கி கொண்டிருக்கும் நிலையில் பத்து படம் மட்டுமே ராகவா லாரன்ஸ் தனக்கு தானே சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளித்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும், கேலி கிண்டல் செய்தும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் பதிவு செய்யப்படுவதால் பதறிய ராகவா லாரன்ஸ் உடனே தனக்கு தெரியாமல் இந்த பட்டம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ரஜினி ஒருவரே உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் என்றும் உடனடியாக விளக்கம் அளித்தார். ஆனால் அவருடைய விளக்கத்தையும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *