shadow

ரஜினியை அரசிலுக்கு அழைக்கும் ராகவா லாரன்ஸ் பாடலின் வரிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை அரசியல் குறித்த தனது இறுதியான, உறுதியான முடிவை அறிவிப்பார் என்று அவரது கோடானு கோடி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ‘வா தலைவா வா’ என்ற பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த பாடலின் முழு வரிகள் இதோ:

போதும் பட்டதெல்லாமே போதும், மாத்துவோம்
யாரு என்ன சொன்னாலும் ஊர மாத்துவோம்,
ஓட்டு போட்டவனை முட்டாளுன்னு பார்க்குறாங்க
வா கேட்டிடலாம், வா தூக்கிடலாம்
உன்னை போல ஒரு நல்லவரு தேவைங்க
நீ வந்தா மாற்றம் தானே
தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா

நல்ல நேரம் பொறக்கணும் இங்க
சிஸ்டம் மாற கூப்பிடறோம்
இஷ்டப்பட்டு நீங்க வந்தா
எப்போதுமே தோள் கொடுப்போம்
விட்ட குறை தொட்ட குறை
உனக்காக காத்திருப்போம்
ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா
தமிழ்நாடே தூள் பறக்கும்
தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா

உங்க கூட்டம் அன்பு கூட்டம்
அடங்கி ஒடுங்கி இருக்குதுங்க
கண்ணை காமி புயல் வரும் இங்க
சாமி கூட அழைக்குதுங்க
ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம்
களத்துக்கு வா தலைவா
கொண்டு வந்தது எதுவுமில்லை
கொண்டு போக எதுவுமில்லை
தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா

Leave a Reply