shadow

கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான ராகவாலாரன்ஸ் அவர்கள் பேசும்போது கமல் குறித்து பேசிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தான் சிறுவயதில் ரஜினி அவர்களின் வெறியனாக இருந்தபோது கமல் அவர்களின் போஸ்டருக்கு சாணி அடித்ததாகவும் ஆனால் அது அறியாத வயதில் செய்த தவறு என்றும், தற்போது கமல் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் ரஜினி, கமல் ஆகிய இருவரும் தற்போது இணைந்து செயல்படும் நிலையில் உள்ளதால் கமல் ரஜினி ரசிகர்களும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்

ஆனால் ராகவாலாரன்ஸ் கூறிய ‘சாணி’ விஷயத்தை மட்டும் குறிப்பிட்ட ஒரு சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் ரஜினி-கமல் ரசிகர்கள் இடையே ஒரு மோதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இதுகுறித்து ராகவா லாரன்ஸ் அவர்கள் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் அதில் ’தான் கமல் போஸ்டர் மீது சாணி அடொத்தது என்பது தான் சிறுவயதில் செய்த அறியாத தவறு என்றும், அந்த வயதில் ரஜினி மீது இருந்த வெறியினால் அவ்வாறு செய்ததாகவும், இதனைத்தான் ஒரு சிறுவயது நிகழ்வாக தான் தர்பார் ஆடியோ விழாவில் தெரிவித்ததாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்

மேலும் கமல் மீதுதான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவர் மீது நான் எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளேன் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் இருப்பினும் தன்னுடைய பேச்சால் ஒரு சிலர் மனம் வருத்தப்பட்டு இருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்

https://www.youtube.com/watch?v=gTbi_MMCcwE&feature=youtu.be

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *