shadow

கைமாறியது ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

motta sivaகாஞ்சனா 2′ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்காக இரண்டு படங்களில் இயக்கி நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றில் ஒரு படத்தின் பெயர்தான்  ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

ஆனால் தற்போது சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் திரைப்படத்திற்கு  ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் கருதியதால், வேந்தர் மூவீஸிடம் இந்த தலைப்பை விட்டுத்தரும்படி கேட்டுக்கொண்டனர். வேந்தர் மூவீஸ் நிறுவனமும் இதற்கு ஒப்புக்கொண்டதால், தற்போது இந்த படத்திற்கு  ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘பட்டாஸ்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, சதீஷ் , தம்பிராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தற்போது வேந்தர் மூவீஸ் நிறுவனம் வேறு தலைப்பு குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

Leave a Reply