shadow

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

moondru-mugamகடந்த 1982ஆம் ஆண்டு சத்யா மூவீஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் ‘மூன்றுமுகம்’. அருண், ஜான், அலெக்ஸ்பாண்டியன் என மூன்று அசத்தலான கேரக்டர்களில் ரஜினிகாந்த் கலக்கலாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் 34 வருடங்கள் கழித்து தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த ரீமேக் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ரீமேக்கில் விஜய், அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply