shadow

mullangiதேவையானவை: முள்ளங்கி – 1, கோதுமை மாவு – முக்கால் கப், சோயா மாவு – 2 டீஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, கலப்பு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். கலப்பு எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். இதற்கு கலவைக் காய் கிரேவி ருசியாக இருக்கும்.

நன்மைகள்:

  முள்ளங்கியில் கால்சியம் சத்து, கோலின் எனப்படும் வைட்டமின் அதிகம் உள்ளது. கோலின், சிசுவின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. சோயா மாவு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட். கோதுமை மாவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன.

Leave a Reply