shadow

radhika1கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சியின் எந்த சேனலை ஆன் செய்தாலும் சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவன விளம்பரத்தை அடிக்கடி பார்க்க முடிகிறது. படிக்கும்போதே சம்பளம், படித்து முடித்தவுடன் வேலை என பிரமாண்டமாக விளம்பரம் செய்து வரும் நிறுவனம் குறித்து சமீபத்தில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருகின்றன.

இந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகை ராதிகா இதுகுறித்து அந்தர்பல்டி அடித்துள்ளார்.

அந்த கல்வி நிறுவனத்தின் உரிமையாளரோ அல்லது பிராண்ட் அம்பாசிடரோ நான் இல்லை என்றும், அந்த கல்வி நிறுவனத்துடன் என்னுடைய தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும் கூறியுள்ள நடிகை ராதிகா, ‘அந்த நிறுவனம் குறித்து பெற்றோர்கள் நன்கு விசாரித்து அதன்பின்னர் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராதிகாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில் ராதிகாவின் இந்த அறிவிப்பால் அந்த கல்வி நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

radhika

Leave a Reply