உதயநிதி படத்தில் பஸ் ஓட்டும் ராதிகா.

திரையில் தோன்றும் கேரக்டருக்காக அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பதில் நடிகர்களை போலவே நடிகைகளும் தற்போது முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஜோதிகா பைக் ஓட்டும் காட்சிக்காக நிஜமாகவே பைக் ஓட்ட பழகினார்.

இந்நிலையில் நடிகை ராதிகா இந்த வயதிலும், தான் நடிக்கும் ஒரு கேரக்டருக்காக ரிஸ்க் எடுத்துள்ளார். அதாவது நடித்துவரும் ‘இப்படை வெல்லும்’ என்றபடத்தில் அவருக்கு பஸ் டிரைவர் வேடம். இந்த கேரக்டர் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் இரண்டு வாரங்கள் கடுமையாக பயிற்சி உண்மையாகவே பஸ் ஓட்ட கற்று கொண்டாராம்.

டூப் வைத்து சில காட்சிகளை எடுத்து கொள்ளலாம் என்று படக்குழுவினர் கூறியும், அதை பொருட்படுத்தாமல் சூப்பராக பஸ் ஓட்டினாராம். அவர் பஸ் ஓட்டும் திறமையை பார்த்து படக்குழுவினர்களே ஆச்சரியம் அடைந்ததாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *