ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ’ராதே ஷ்யாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் மேலும் முன்னணி நாயகி ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வம்சி இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது. வழக்கம்போல் இதுவும் ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படம்

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது

Leave a Reply