shadow

lingusamy and radharaviகடந்த 1954ஆம் ஆண்டு எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து திரைப்படங்களை எடுத்த பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் அவர்களின் 108வது பிறந்தநாள் வெகு சிறப்பாக நேற்று இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், லிங்குசாமி, ராதாரவி, ரமேஷ்கண்ணா, ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த இயக்குனர் லிங்குசாமியை பார்த்து நடிகர் ராதாரவி, ‘ஏன் இப்படி இளைச்சிட்டிங்க என்று கேட்டாராம். அதற்கு லிங்குசாமி தான் டயட்டில் இருப்பதாக பதில் கூறியிருந்தார். இதற்கு ராதாராவி, ‘நீயா இளைக்கிறியா அல்லது நீ இயக்கும் படங்கள் உன்னை இளைக்க வைக்கின்றதா? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

இதனால் மனம் வருத்தமடைந்த லிங்குசாமி, மேடையில் பேசும்போது ராதாரவிக்கு பதிலடி கொடுத்தார். எடுக்கிற படங்கள் தான் உடம்பு இளைச்சுப் போறதுக்கு காரணமான்னு ராதாரவி என்கிட்ட கேட்டாரு. எல்லாரும் 100 வருஷம் வாழ்றாங்கன்னா அதுக்கு தொப்பை இல்லாமல் இருக்கிறது தான் காரணம். நான் தினமும் யோகா பண்றேன். அதனால தான் உடம்பை இளைச்சிருக்கேன்

என்னோட இந்த வயசுக்கு, நான் இந்த இடத்துல இருக்கிறதே எனக்கு பெருமையாகவும், வெற்றியாகவும் தான் நெனைக்கிறேன். ரெண்டு ஸ்டெப்பு பின்னாடி போறோம்னா அது பாயிறதுக்காகத்தான்னு நெனைச்சுக்கணும்

இவ்ளோ சின்ன வயசுலேயே பல வெற்றி, தோல்விகளைப் பார்த்திருக்கிறேன், பல சங்கடங்களையும் சந்திச்சிருக்கேன். அதெல்லாம் என்னோட உடமை இளைக்க வைச்சுறாது  என்று ஆவேசமாக பேசினார்.

லிங்குசாமி பேச்சால் விழா மேடை பெரும் பரபரப்பு அடைந்தது.

Leave a Reply