shadow

radhika and nayanதனுஷ் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக நயன்தாராவுடன் நடிக்கின்றார். இந்த படத்தில் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

தனுஷ், நயன்தாரா, எப்.எம் வானொலி ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று முதல் பாண்டிச்சேரியில் நடைபெறும் இந்த படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் இரண்டு பாடல்களுக்கு டியூன் போட்டு முடித்துவிட்டதாக அனிருத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply