அஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கும் பிரபல வில்லன்

பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’, விஷால் நடித்த ‘மருது’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘பில்லா பாண்டி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகர் மன்ற தலைவர் கேரக்டரில் நடித்து வருகிறாராம். இதற்காக அவர் உண்மையான அஜித் ரசிகர் மன்ற தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் இவருடைய 20 ஆண்டுகால நண்பராம். இதனால் அஜித்தை தனக்கு பெர்சனாக நன்றாக தெரியும், தான் இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து அஜித் அறிந்தால் உண்மையில் சந்தோஷப்படுவார் என்றும் ஆர்.கே.சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *