பைலின் புயல்:

பைலின் புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் பாரதீப் இடையே கரையை கடந்தது. புயல் காரணமாக பலத்த 200 கி.மீ., காற்று வீசியது. இதனால் பல மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடீசாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கஜபதில குர்தா, பூரி, ஜகத்சிங்பூர், நாயகர்க், கட்டாக், பாத்ரக் கேந்டிரபாரா மற்றும் புவனேஸ்வரின் கடற்கரையோரம் ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே இந்த புயலுக்கு ஒடிசாவில் 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கிடையில் ஒடிசாவில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 18 பேர் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

மரம் விழுந்து 3 பேர் பலி:

இந்த புயல் காரணமாக ஒடிசாவில் மரம் விழுந்ததில் பெண் உள்பட 3 பேர் பலியாயினர்
பிரதமர் உத்தரவு:பைலின் புயல் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி பயணம் ரத்து:

புயல் காரணமாக மேற்குவங்கம் சென்ற ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தனது பயணத்தை முடித்து கொண்டு அவசரமாக டில்லி திரும்பினார். முப்படை தளபதிகள் அவரிடம் தொடர்பில் உள்ளனர்.

 மீட்பு பணியில் விமானங்கள்:

பைலின் புயலால் பாதிக்கப்படும் அனைத்து பகுதிளிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். மேலும் அவர், புயலால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 ஹெலிகாப்டர் 12 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *