shadow

ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய விவகாரம். ஒபாமா-புதின் கருத்து

turkeyசிரியா நாட்டில் இருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய நாட்டின் ஜெட் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, நேற்று காலை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் குறித்து துருக்கி அதிகாரிகள் கூறியபோது, “விதிமுறைகளை மீறி ரஷ்யாவின்  போர் விமானம் தங்கள் நாட்டில் எல்லையில் வர முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும், தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் 10 முறை எச்சரிக்கை விடுத்தும் அந்த விமானம் துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயற்சித்ததை அடுத்து, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்.

இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறியபோது, ‘துருக்கி எங்கள் முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி – ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சம்பவம் பற்றி கவனத்துடன் ஆராயப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் ரஷ்ய போர் விமானம் சிரியாவின் எல்லைக்குள்ளாகத்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கள் விமானிகள் துருக்கிக்கு எதிராக எந்த செயல்களிலும் ஈடுப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியபோது, “ரஷியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது தொடர்பான இதர தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. விரைவில், துருக்கி அதிபருடன் பேசி நிலைமையை அறிய இருக்கிறேன். ஆனால், தற்போதைய நிலவரப்படி எல்லா நாடுகளைப் போல தங்கள் நாட்டு தரை எல்லையையும், வான் எல்லையையும் பாதுகாக்கும் உரிமை துருக்கிக்கும் உள்ளது’ என்று கூறினார்.

Leave a Reply