shadow

டிவில்லியர்ஸ் அதிரடி வீண். பெங்களூரை வென்றது பஞ்சாப்

பெங்களூர் அணியில் நேற்று முதல் களமிறங்கினார் டிவில்லியர்ஸ். அதன் பயனாக அவர் 46 பந்துகளில் 89 ரன்கள் அதிரடியாக அடித்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது.

149 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி நிதானமாக விளையாடி 14.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஆம்லா அவுட் ஆகாமல் 58 ரன்களும் மாக்ஸ்வெல் 43 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீச்சி வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஐதராபாத் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply