shadow

Punjab-Bank

புதுதில்லியில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷநல் வங்கியில் காலியாக உள்ள Chief Security Officer பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chief Security Officer (CSO)

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய ராணுவத்தில் Colonel தகுதிக்குரிய பணியிலிருந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது முப்படைகள் ஏதாவதொன்றில் Colonel பணிக்கு இணையக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 36.200 – 40,400

வயதுவம்பு: 01.01.2014 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் பணி அனுபவம், மருத்துவ தகுதி, கணினி இயக்கும் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை Punjab National Bank, CSO, New Delhi என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.05.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  THE GENERAL MANAGER-HRD, Punjab National Bank, HO: HRDD, 7-BHIKHAIJI CAMA PLACE, NEW DELHI – 110066.

Leave a Reply