குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது: காங்கிரஸ் முதல்வர் அதிரடி

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் அமலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த திங்கட்கிழமை மக்களவையில் நேற்று முன்தினம் மாநிலங்களிலும் இந்த சட்டம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் நேற்று இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இதனை அடுத்து குடியுரிமை சட்டம் அமலானதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் புதிய குடியுரிமைச் சட்டம் சட்டத்திருத்தத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்றும் இந்தியாவின் மதச் மீதான நேரடி தாக்குதலாக இந்த சட்டத்திருத்தம் இருப்பதாகவும் எனவே இந்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

இதேபோல் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநில முதல்வர்களும் அறிவிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply