ஐபிஎல் 2018: ஐதராபாத்தை தோற்கடித்த பஞ்சாப்

சண்டிகரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கினார். கிறிஸ் கெயில் அதிரடி சதம் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 194 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதமடித்த கெயில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *