shadow

vijay and deviஇளையதளபதி விஜய் நடித்து வரும் புலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் மனம் திறந்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பொதுவாக விஜய் படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகிவிடும். இருப்பினும் நானும் விஜய்யும் கடைசியாக இணைந்த ‘வில்லு’ படத்தின் பாடல்கள் இதுவரை வந்த படங்களில் சூப்பர் ஹிட் என விஜய் அடிக்கடி கூறுவார். அந்த அளவுக்கு அவர் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளார்.

விஜய்யின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த படத்தின் ஆறு பாடல்களையும் அவருக்கு பிடித்தவாறு கம்போஸ் செய்துள்ளேன். நிச்சயம் இந்த பாடல்கள் அனைத்தும் அவருடைய ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது’ என்று கூறியுள்ளார்.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, வித்யூலேகா ராமன் மற்றும் பலர் நடித்துள்ள ‘புலி’ படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்.17ல் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply