இணையதளத்தில் திருட்டுத்தனமான வெளிவந்த ‘புலி.
puli
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல ஆங்கில பத்திரிகைகள் படுமோசமாக விமர்சனம் செய்துள்ள நிலையில், தமிழின் முன்னணி வார பத்திரிகையான குமுதம் மட்டும் 4ஸ்டார் வழங்கி ‘புலி’ படத்தை பாராட்டியுள்ளது.

ஆனாலும் வசூல் அளவில் முதல் நாள் இருந்த வசூலைவிட அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்துவிட்டதாகவும், பல திரையரங்குகளில் இந்த வாரத்தோடு படத்தை தூக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் பெரிய ஸ்க்ரீனில் இருந்து ‘புலி’ தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ‘மாயா’ திரையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ‘புலி’ திரைப்படம் ஐந்து இணையதளங்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் இந்த திரைப்படத்தை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ‘புலி’ படக்குழுவினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *