shadow

பாகுபலி’யின் சாதனையை முறியடிக்குமா புலி?

puliதென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்ற டிரைலராக ஷங்கரின் ‘ஐ’ படம் மட்டுமே இருந்த நிலையில் அந்த சாதனையை விஜய்யின் ‘புலி’ திரைப்படம் முறியடித்துள்ளது. இது விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியான ‘புலி’ படத்தின் டிரைலர் சரியாக 20 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை 54,000 லைக்குகள் வாங்கி முதலிடத்தில் இருந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ‘புலி’ படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 60,000 லைக்குகளை பெற்று எந்த படமும் தொட முடியாத சாதனையை செய்துள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கும்போது பாகுபலி படத்தின் வசூலை முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே அனைத்து தரப்பினர்களும் கருதி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் இந்த படம் நிச்சயம் கவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply