shadow

ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பிரமுகர் அதிமுகவில் இருந்து நீக்கம்.


தமிழகத்தின் அடுத்த முதல்வர் சசிகலாவா? ஓ.பன்னீர்செல்வமா? என பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் இருக்கும் நிலையில் புதுச்சேரி அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓம்சக்தி சேகர் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஓம்சக்தி சேகர் அவர்கள், ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், கட்சி கட்டுப்பாட்டை அவர் மீறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply