shadow

pudhucherry governorபுதுச்சேரி ஆளுனர் வீரேந்திர கட்டாரியாவை நேற்று இரவோடு இரவாக அதிரடி நீக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுனரை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு அதிரடியாக நீக்கினார். புதுச்சேரி ஆளுனர் பணியை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஆளுனர் அஜய் குமார் சிங், கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு புதுச்சேரியின் ஆளுனராக நியமனம் செய்யப்பட்ட வீரேந்திர கட்டாரியா. புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டபோது அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். இதனால் புதுச்சேரி முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் இருதுருவங்களாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து என்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றதும் முதல் வேலையாக டெல்லி சென்ற புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுனர் வீரேந்திர கட்டாரியாவை மாற்றும்படி மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். இதனால் மத்திய அரசு, புதுச்சேரி ஆளுனரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது. ஆனால் தான் ஒருபோதும் ராஜினாமா செய்யப்போவது இல்லை என்று வீரேந்திர கட்டாரியா கூறிவந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, புதுச்சேரி மாநில ஆளுனர் வீரேந்திர கட்டாரியா உடனடியாக ஆளுனர் பதவியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது. இந்த தகவலை அறிந்தவுடன் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஒரு திருவிழா போல கொண்டாடினர்.

Leave a Reply