10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுத்துறையின் அதிரடி அறிவிப்பு

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 31 அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், இயக்கங்களை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குனர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுத் தேர்வில் முறைகேடு செய்பவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் வகையில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply