2இந்த ஐ.பி.எல் போட்டியில் இரண்டு போட்டிகள் தவிர அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீரநடை போட்டுக்கொண்டிருந்த பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு நேற்று மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்தது. நேற்று நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்தியது.

டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பீல்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது. சிம்மன்ஸ் மிக அபாரமாக விளையாடி 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை அணிக்கு இந்த வெற்றியின் மூலம் அரையிறுக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம். இந்த போட்டியில் தோல்வியடைந்த போதிலும் பஞ்சாப் அணி 18 புள்ளிகளுடன் முதலிடஹ்தில் உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *