shadow

பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய்-ஹரி கூட்டணியில் ‘சிங்கம் 4″?

singhamஇளையதளபதி விஜய் நடிப்பில் ‘புலி’ என்ற பிரமாண்ட படத்தை ஷிபு தமீம் அவர்களுடன் இணைந்து தயாரித்து வரும் விஜய்யின் பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமார், இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனியாக மூன்று படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். எம்.ராஜேஷ், ஹரி மற்றும் ராம்பிரகாஷ் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படங்ளை அவர் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் பி.டி.செல்வகுமார்-ஹரி இணையவுள்ள படத்தில் விஜய் நடிப்பார் என்றும், இந்த படம் ‘சிங்கம் 4’ ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் விஜய் 61 படமாக இருக்கும் என்றும், வரும் 2016ஆம் ஆண்டின் இறுதியில் இந்த படம் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

அதற்கு முன்னர் எம்.ராஜேஷ் மற்றும் ராம் பிரகாஷ் இயக்கும் படங்களை பி.டி.செல்வகுமார் தயாரிக்கவுள்ளதாகவும், இரண்டு படங்களிலும் ஜீவா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் ராம்பிரகாஷ், சமீபத்தில் வெளிவந்த ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply