shadow

satelliteஇன்று காலை 9 மணி 52 நிமிடங்களுக்கு 5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 23 வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
 
பி.எஸ்.எல்.வி. சி 23 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராக்கெட் பயணத்தை நேரில் பார்வையிட்டது பெருமைக்குரிய நிகழ்ச்சி என்றும் தனது வாழ்நாளில் இது ஒரு மறக்கமுடியாத நாள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக ராக்கெட் செலுத்துமிடமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நேற்று வந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நேற்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் தங்கியிருந்த பிரதமர் இன்று காலை ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க மிகுந்த ஆவலுடன் வந்திருந்தார்.

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கடைசி 49 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி 52 நிமிடங்களுக்கு ஆரம்பமானது. பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட் 7, கனடா நாட்டின் இரண்டு செயற்கைகோள்கள் உள்ளிட்ட 5 செயற்கைகோள்களை தாங்கிச்செல்லும் இந்த ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1qIJktv” standard=”//www.youtube.com/v/zyUj-DSLQUk?fs=1″ vars=”ytid=zyUj-DSLQUk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3368″ /]

Leave a Reply