shadow

rajnathசமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு மணற்கொள்ளை மாபியாதான் காரணம் என ரவிக்குமாரின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பரிந்துரை செய்தால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தயார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் மணல் கொள்ளை மாபியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிக்குமார் தனது அப்பார்மெண்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ரவிகுமாரின் பெற்றோர்களும் எதிர்க்கட்சிகளும் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன.

மேலும் நேற்று  கோலார் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு, பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுளது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘‘கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தால்தான் நாங்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியும். கர்நாடக அரசின் அறிக்கைக்காக மத்திய அரசு காத்துக்கொண்டிருக்கிறது’’ என்றார்.

Leave a Reply