shadow

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் அணியின் ஒட்டுமொத்த வெற்றி

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி கிட்டத்தட்ட அனைத்து பதவிகளுக்கும் வெற்றி பெற்றுள்ளது. செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் ஒருவராகிய மிஷ்கின் மட்டுமே விஷாலின் ‘நம்ம அணி’யின் தோல்வி வேட்பாளர் ஆவார்.

வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்

தலைவர் பதவி: விஷால் வெற்றி. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 332 வாக்குகளும், கேயார் 224 வாக்குகளும் பெற்றனர்.

துணைத்தலைவர் பதவி: பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் வெற்றி. இவர்களை எதிர்த்து போட்டியிட்ட கே.ராஜன் 269 வாக்குகளும்,
சுரேஷ் காமாட்சி 191 வாக்குகளும், ஏ.எம்.ரத்னம் 294 வாக்குகளும்,
பி.டி.செல்வகுமார் 216 வாக்குகளும் பெற்றனர்.

செயலாளர் பதவி: ஞானவேல்ராஜா, கதிரேசன் வெற்றி. இவர்களை எதிர்த்து போட்டியிட்ட மிஷ்கின் 242 வாக்குகளும், ஏ.எல்.அழகப்பன் 161 வாக்குகளும், சிவசக்தி பாண்டியன் 206 வாக்குகளும், ஜேஎஸ்கே சதீஷ் 237 வாக்குகளும் பெற்றனர்.

பொருளாளர் பதவி: எஸ்.ஆர்.பிரபு வெற்றி. இவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயமுரளி 212 வாக்குகளும், எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், பெற்றனர்.

Leave a Reply