shadow

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் அணி வெற்றி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. தமிழ் படத்தயாரிப்பாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் 1059 வாக்குகள் பதிவாகியது

இந்த வாக்குகள் நேற்று மாலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 362 வாக்குகளும், கேயார் 173 வாக்குகளும், ராதா கிருஷ்ணன் 248 வாக்குகளும் பெற்றனர். இதனால் விஷால் 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவர் ஆகிறார் விஷால்

விஷால் மட்டுமின்றி விஷால் அணியில் போட்டியிட்ட ஞான வேல் ராஜாவும் செயலாளர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர்களும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் அணி முழுமையான வெற்றியை பெற்றுள்ளது.

Leave a Reply