shadow

தயாரிப்பாளர் சங்க தேர்தல். குஷ்புவை களமிறக்கிய விஷால்

கடந்த ஆண்டு நடிகர் சங்க தேர்தலை நடத்தி அச்சங்கத்தை கைப்பற்றியது போல தயாரிப்பாளர் சங்கத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள விஷால் முடிவு செய்துவிட்டார். அவ்வப்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை அவர் தாக்கி வந்ததால் சங்கத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் விஷால் அணியில் இருந்து யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தாணு, டி.ராஜேந்தர் ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில் குஷ்புவும் களமிறங்கியுள்ளதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது. விஷால் உள்பட இளளஞர்கள் பட்டாளம் அவருக்கு எளிதில் வெற்றியை தேடி தந்துவிடுவார்கள் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply