bjp and mdmkபாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிகவின் பிடிவாதத்தால் சிக்கல் நீடித்துக்கொண்டே போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வரும் அரசியல் கட்சிகளின் மத்தியில் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடுகளை கூட இன்னும் இறுதி செய்யாமல் தமிழக பாரதிய ஜனதா கூட்டணி தடுமாறி வருகிறது.

பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக தங்களுக்கு 14 தொகுதிகள் கண்டிப்\பாக வேண்டும் என்று பிடிவாதம் செய்வதால், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேமுதிகவிறு 14 தொகுதிகள் போக மீதியுள்ள 26 தொகுதிகளில் பாஜக, மதிமுக, பாமக ஆகிய் கட்சிகளூம், மேலும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாமக தங்களுக்கு தொகுதிகள் குறைந்தாலும் பரவாயில்லை, நாங்கள் கேட்கும் தொகுதிகள் வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டுகிறது. மேலும் மதிமுகவிற்கு ஐந்து தொகுதிகள் போதும் என்று தேமுதிக கட்சி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆலோசனையும் சொல்கிறதாம். இதனால் மதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

தங்களின் கெளரவத்திற்கு பங்கம் இல்லாத வகையில், 7 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மற்ற கட்சிகளை விட அதிக மாவட்டங்களில் வளர்ந்துள்ள மதிமுகவை குறைத்து எடைபோடக் கூடாது என்றும் எங்களுக்கு குறைந்த தொகுதிகள்தான் வழங்கப்படும் என்று பாஜக நினைத்தால், மதிமுக எந்த முடிவும் எடுக்க  தயங்காது என்று எச்சரித்துள்லது.

Leave a Reply