shadow

anandamurthyமோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டுக்க்கு குடியேறிவிடுவேன் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பிரபல கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி நேற்று உடல்நல கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. அவருடைய மரணத்திற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் ஆகிய கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி வெளிப்படுத்தும் எழுத்தாளர்களில் ஒருவர்.

இவர் உடல்நிலை சரியில்லாததால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிலகாலம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

மறைந்த எழுத்தாளருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அவருடைய அவரது மரண செய்தியை கேட்டதும் மங்களூர் பகுதியில் உள்ள பஜ்ரங் தள் கட்சியின் அலுவலகத்தில் சிலர் பட்டாசுகளை வெடித்து, அனந்தமூர்த்தியின் மரணத்தை சந்தோஷமாக கொண்டாடினர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1pSmfWv” standard=”//www.youtube.com/v/oxB-ICM5NsY?fs=1″ vars=”ytid=oxB-ICM5NsY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1765″ /]

Leave a Reply