priyankaகர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பாஜக எம்.எல்.ஏ பாபு என்பவர் தனது மொபைல் போனில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் படத்தை பார்த்துக்கொண்டிருந்ததாக எழுந்த புகாரால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ளபா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரபு சவான் எந்தவித தவறான நோக்கத்திலும் பிரியங்காவின் படத்தை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

நேற்று கர்நாடக சட்டபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரபு எம்.எல்.ஏ பிரியங்காவின் படத்தை பெரிதுபடுத்தி தனது மொபைல் போனில் பார்த்துக்கொண்டிருந்த காட்சியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்ரு வீடியோ எடுத்து  ஒளிபரப்பு செய்தது. இந்த வீடியோ வெளியானதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் படத்தை சட்டசபை கூட்டத்தின்போது செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க.வினரிடமும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரபு சவான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சட்டசபை கூட்டம் நடந்தபோது எனது செல்போனில் பிரியங்கா காந்தியின் படத்தை பார்த்ததில் எந்த தவறும் இல்லை. தவறான நோக்கத்தில் அவரது புகைப்படத்தை நான் பார்க்கவில்லை.

செல்போனில் பல்வேறு புகைப்படங்களை பார்க்கும்போது, பிரியங்கா படத்தையும் பார்த்தேன். சட்டசபை நடந்தபோது புகைப்படங்களை பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1BdWIud” standard=”http://www.youtube.com/v/cSO2JKXzJ7Q?fs=1″ vars=”ytid=cSO2JKXzJ7Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9356″ /]

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *