shadow
Priyanka-Siddharthவிஜய் நடித்த தமிழன்’ படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. இவருடைய சகோதரர் சித்தார்த் சோப்ராவின் திருமணம்  பிப்ரவரி 25ஆம் தேதியில் கோவாவில் நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்..சித்தார்த் சோப்ராவின் நீண்ட நாள் தோழியான கனிகாவை பிப்ரவரி 25ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்ய திட்டமிட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இவர்களுடைய திருமணம் திடீரென எதிர்பாராத காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் திருமணத்தின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ப்ரியங்கா குடும்பத்தின் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமண தேதி ஒத்தி வைத்ததற்கான காரணத்தை ப்ரியங்காவின் குடும்பத்தினர் வெளியிடவில்லை. இருப்பினும் திருமண தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்பதை மட்டும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply