shadow

ஃபேஸ்புக் உரிமையாளரையே பின்னுக்கு தள்ளிய ப்ரியாவாரியர்

மலையாள திரைப்படமான ஒரு ஆடார் லவ் என்ற திரைப்படத்தின் டீசரில் நடிகை ப்ரியாவாரியர் சிமிட்டிய ஒரே ஒரு கண் சிமிட்டல் இந்தியா முழுவதும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பத்துவினாடி வீடியோ அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது

இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் உரிமையாளரையும் ப்ரியாவாரியர் பின்னுக்கு தள்ளிவிட்ட ஆச்சரியமான செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது

அதாவது ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுகர்பெர்கைக் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிரியாவாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 4.5 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது. இவ்வளவிற்கும் ப்ரியாவாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒருசில ஆயிரங்கள் ஃபாலோயர்கள் மட்டுமே கடந்த மாதம் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply