Prithvi-II missileஅணுஆயுதங்களை சுமந்து சென்று சரியான இலக்கை தாக்கும் பிரித்வி ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்காக தயாராகியிருக்கும் இவ்வகை பிரித்வி ரக ஏவுகணைகளை மத்திய விண்வெளி மற்றும் பாதுகாப்புக்கழகம் தொடர்ந்து தயாரித்து ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.. இந்த வகையில் இன்று காலை ஒடிசா கடலோரப்பகுதியில் பிரித்வி – 2 ரக ஏவுகணை சோதித்துப்பார்க்கப்பட்டது.

இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *