shadow

shadow

பிரிட்டன் இளவர்சர் வில்லியம்ஸ் நேற்று தனது 32வது பிறந்தநாளை அரண்மனையில் வெகுவிமரிசையாக கொண்டாடினார். அவருக்கு அரச குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இளவரசர் வில்லியம்ஸ் அவர்களின் பாட்டியும் ராணியுமான எலிசபெத், தனது பேரனுக்கு ஹெலிகாப்டர் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று லண்டனில் உள்ள அரண்மனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவருக்கு அவரது மனைவி கேத் மிடில்டன் உள்பட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ராணி எலிசபெத், வில்லியம்ஸுக்கு பிறந்தநாள் பரிசக ஏ 109 எஸ் என்ற அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டரை பிறந்த நாள் பரிசாக கொடுத்தர்.

இந்த ஹெலிகாப்டர் மணீக்கு 180 கி.மீ வேகத்தில் பறக்கும். வில்லியம்ஸ் ஏற்கனவே ஆர்.ஏ.எப்.‘‘ ரக ஹெலிகாப்டரின் விமானி ஆக இருப்பதால் அவரே இந்த ஹெலிகாப்டரையும் ஓட்டமுடியும். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சீக்கிரமாக வில்லியம்ஸ் திரும்பவேண்டும் என்பதற்காக ராணி இந்த ஹெலிகாப்டரை பரிசளித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply