ஏப்ரலில் இந்தியா வரும் இங்கிலாந்து அரச குடும்பம்.
24-1374637060-kate-middleton-william11-600
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேத் மிடில்டன் மற்றும் குழந்தைகளுடன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தினர்களை வரவேற்க மத்திய அரசு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தியா வரும் வில்லியம்ஸ், கேத்மிடில்டன் மற்றும் ஜார்ஜ், சார்லோட் ஆகியோர் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் ஏப்ரல் 14-ஆம் தேதி பூடான் செல்கின்றனர்.

பின்னர் மீண்டும் ஏப்ரல் 16-ஆம் தேதி இந்தியாவுக்கு திரும்பும் அவர்கள் தாஜ்மஹால் உள்ளிட்ட ஒருசில இடங்களை பார்வையிட்டு பின்னர் இங்கிலாந்து திரும்புகின்றனர்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1992ஆம் ஆண்டு வில்லியம்ஸ் தாயார் டயானா தனது கணவருடன் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த நிலையில் தற்போது டயானாவின் மகன் வில்லியம்ஸ் தனது மனைவியுடன் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசரின் இந்த பயணத்தால் இந்திய-இங்கிலாந்து உறவு மேம்படும் என இருநாட்டு அரசு அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *