டெல்லியில் சட்டமன்றம் முடக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் இன்று பிறப்பித்தார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு, சட்டமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்துமாறு ஆளுனரை கேட்டுக்கொண்டார். ஆனால் முதல்வரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் நஜீப் சிங், சட்டமன்றத்தை கலைக்க மறுத்துவிட்டார். அவர் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவைக்கு  பரிந்துரை செய்தார்.

ஆளுனரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து இன்று முதல் சட்டமன்றம் முடக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply