shadow

பூரி ஜெகந்நாத் கோவிலில் குடியரசு தலைவருக்கு அவமரியாதையா?

இந்துக்களின் புனிதமான கோவில்களில் ஒன்றான பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் சென்ற குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவிக்கு அவமரியாதை நடந்து இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 18ஆம் தேதி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் இருவரும் பூரியில் உள்ள ஜென்னாதர் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது. கோயில் கருவூலத்தின் வாயிலுக்குள் செல்ல குடியரசு தலைவருக்கு அர்ச்சகர்கள் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அவரது மனைவியை தள்ளியுள்ளனர். இது அப்போது வெளியே வரவில்லை என்றாலும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு பூரி மாவட்டக் கலெக்டர் அரவிந்த் அகர்வாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பூரி கோயில் நிர்வாக தலைமை அதிகாரியும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பிரதிபா குமார் மொஹபத்ரா உறுதிபடுத்தியுள்ளார். நடந்த சம்பவங்களை முழுவதும் கூற மறுத்துவிட்ட பிரதிபா குமார், இதுகுறித்து கோயில் நிர்வாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 18ஆம் தேதி காலை 6.35 மணி முதல் 8.40மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில அரசு அதிகாரிகள் மற்றும் சில அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்து கொண்டு இருக்கும்போது சில அர்ச்சகர்கள் அவர்களை தள்ளியுள்ளனர். முறையாக கொடுக்க வேண்டிய மரியாதையும் கொடுக்கப்படவில்லை என்று பிரகாதிவாடி என்ற உள்ளூர் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply