shadow

டிரம்ப்-மோடி சந்திப்பு. உறுதி செய்தது வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்கா வர அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது வெள்ளை மாளிகை பிரதமர் மோடியின் வருகையை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் அழைத்து உரையாடினார். அப்போது, இந்தியாவில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில், பாஜக வெற்றிபெற்றதற்கான வாழ்த்துகளை டிரம்ப், மோடிக்கு தெரிவித்துக் கொண்டார். மேலும், ஆசிய பிராந்தியத்தில் நிலவும் அரசியல் நிலவரம் பற்றி கேட்டறிந்த டிரம்ப், தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியாவும், அமெரிக்காவும் கரம்கோர்த்து செயல்படவும் கேட்டுக் கொண்டார்.

இதன்முடிவாக, அமெரிக்கா வரும்படி, மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இதையேற்றுக் கொண்ட மோடி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள இந்திய பிரதமர் அலுவலகம், 2017ன் பிற்பகுதியில் மோடி, அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply