shadow

கருத்துக்கணிப்புகள் வெளியிட புதிய நிபந்தனைகள். தேர்தல் ஆணையம் உத்தரவு
opinion-poll
தேர்தலுக்கு முன்பு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளுக்கும், தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்படும் Exit Poll என்ற கருத்துக்கணிப்புகளுக்கும் ஒருசில நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து பல தனியார் நிறுவனங்கள் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகள் பெரும் பணம் வாங்கிக்கொண்டு பாரபட்சமாக எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக நிறுத்தி கொள்ளப்பட வேண்டும் என  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் மே 14-ம் தேதி காலை 7 மணிக்குப் பிறகு, தேர்தல் கருத்துக் கணிப்புகளை பிரசுரிக்கவோ, ஒளிபரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே 16ம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், பிரசுரிக்கவும், ஒளிபரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் மே 16ம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கும் என்றும் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடையும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Chennai Today News: Pre and post election poll restricted by Election Commission

Leave a Reply