shadow

prasandhடெல்லியில் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் கடந்த சில நாட்களாக மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்த நிலையில்  ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும் இணைந்து வரும் 14-ம் தேதி புதிய கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இதுகுறித்து பிரசாந்த் பூஷண் இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: என்னையும், யாதவையும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. கடந்த 28-ம் தேதி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற விதம் தவறானது. கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ள தொண்டர்களுடன் வரும் 14-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.

எங்களுடைய புதிய கட்சி அரசியல் கட்சியாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், தொண்டர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைப் பொறுத்து அரசியல் கட்சியாகவும் இருக்கலாம். புதிய அரசியல் கட்சி தொடங்குவதைவிட, இப்போதுள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Leave a Reply