இன்றைய உதயநிதியின் போராட்டம் பிரசாந்த் கிஷோரின் திட்டமா?

குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையிலும், புதன் அன்று மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்பிக்களால் நிறைவேற்றப்பட்டு அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அமலுக்கு வந்துவிட்ட பின்னர் தற்போது அந்த மசோதாவை எதிர்த்து திமுக போராட்டம் நடத்திவருகிறது

மக்களவையில் தாக்கல் செய்த அன்றோ அல்லது மாநிலங்களவையில் தாக்கல் செய்த அன்றோ போராட்டம் நடத்தி இருந்தால் இந்த போராட்டத்திற்கு ஒரு அர்த்தம் உள்ளது. தற்போது இந்த சட்டம் இயற்றப்பட்ட பின் சட்டத்தை வாபஸ் பெறுக என திமுக போராட்டம் நடத்துவது எந்த அளவுக்கு நியாயமானது என்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று காலை பிரசாந்த் கிஷோர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டாலும் மாநிலங்களிலுள்ள முதல்வர்கள் எதிர்த்தால் இந்த மசோதா அமல் படுத்த முடியாமல் போய்விடும் என்று டுவிட் செய்தார்

இந்த ட்வீட்டை அடுத்து திமுக இன்று போராட்டத்தை ஆண்டு திடீரென ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போராட்டமே பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையாக தான் இருக்கும் என்று பாஜக பிரமுகர் ஒருவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply