9பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து முக்கிய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். சில முக்கிய வி.ஐ.பி நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து மரியாதை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் இருந்து கமல்ஹாசன் தலைமையிலான குழு இந்த விழாவில் கலந்து கொள்ள கேன்ஸ் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1t5ge8L” standard=”http://www.youtube.com/v/3m4tpAbcYrI?fs=1″ vars=”ytid=3m4tpAbcYrI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5726″ /]

இந்நிலையில் கேன்ஸ் திரைப்படவிழாவில் நடிகை  America Ferrara வெள்ளை நிற அழகிய உடையணிந்து கலந்துகொண்டார். 30 வயதான நடிகை  America Ferraraவுக்கு சிவப்புக்கம்பள மரியாதை கொடுக்கப்பட்டது. அவர் அந்த சிவப்புக்கம்பள மரியாதையை ஏற்று ஒய்யாரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது உக்ரைன் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் Vitalli Sediuk என்பவர் திடீரென நடிகையின் கவுன் போன்ற உடைக்குள் புகுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அலறினார். உடனடியாக அங்கிருந்த செக்யூரிட்டி அதிகாரிகள் அந்த பத்திரிகையாளரின் கால்களை பிடித்து இழுத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விழாக்குழுவினர் நடிகையிடம் மன்னிப்பு கேட்டு அவரை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவருடைய முகத்தில் இருந்து பீதி கொஞ்சமும் குறையைவில்லை.

பத்திரிகையாளர் Vitalli Sediuk என்பவர் கடந்த கேன்ஸ் திரைப்படவிழாவின் போது நடிகர் வில்ஸ்மித்தின் கன்னத்தில் முத்தமிட முயன்றதால், வில்ஸ்மித்தால் தாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *